இந்திய ரயில்வே (Indian Railways) தனது பயணிகளின் வசதிக்காகவும், டிக்கெட் முன்பதிவில் நடக்கும் முறைகேடுகளைத் தவிர்க்கவும் Ticket Cancellation மற்றும் Refund Rules-களில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிகள் ஏப்ரல் 2026 முதல் முழுமையாக அமலுக்கு வருகின்றன. நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணிப்பவர் என்றால், இந்த மாற்றங்கள் என்னவென்று தெரிந்துகொள்வது அவசியமாகும்

ரத்து செய்யும் நேரம் மிக முக்கியம்

பழைய விதிகளின்படி, ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் டிக்கெட்டை ரத்து செய்தால் குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே பிடிக்கப்படும். ஆனால் இப்போது இந்த Time Window மாற்றப்பட்டுள்ளது.

  • More than 72 Hours: ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாகவே உங்கள் Confirmed Ticket-ஐ ரத்து செய்தால், உங்களுக்கு அதிகபட்ச ரீஃபண்ட் (Maximum Refund) கிடைக்கும். இதில் ஒரு நபருக்கு ஒரு குறிப்பிட்ட Flat Cancellation Charge மட்டுமே கழிக்கப்படும்.
  • 72 to 24 Hours: ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால், உங்கள் டிக்கெட் கட்டணத்தில் 25% Deduction செய்யப்படும். இதற்கு முன்பு இது 48 முதல் 12 மணி நேரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • 24 to 8 Hours: நீங்கள் பயணத்திற்கு 24 மணி நேரம் முதல் 8 மணி நேரத்திற்கு முன்பாக ரத்து செய்தால், 50% of the fare அபராதமாகப் பிடிக்கப்படும்.
  • Less than 8 Hours: இதுதான் மிக முக்கியமான மாற்றம். ரயில் புறப்பட 8 மணி நேரத்திற்கும் குறைவாக இருக்கும்போது டிக்கெட்டை ரத்து செய்தால், உங்களுக்கு No Refund (எந்தப் பணமும் திரும்பக் கிடைக்காது). முன்பு இந்த கால அவகாசம் 4 மணி நேரமாக இருந்தது.

2. Class-wise Flat ticket Cancellation Charges (72 மணி நேரத்திற்கு முன்)

நீங்கள் 72 மணி நேரத்திற்கு முன்பே ரத்து செய்கிறீர்கள் என்றால், வகுப்பு வாரியாகப் பிடிக்கப்படும் கட்டணங்கள் இதோ:

  • AC First Class/Executive Class: ₹240 + GST
  • AC 2 Tier: ₹200 + GST
  • AC 3 Tier/Chair Car: ₹180 + GST
  • Sleeper Class: ₹120
  • Second Class (2S): ₹60

3. Waitlisted மற்றும் RAC டிக்கெட்டுகளுக்கான விதிகள்

Waitlisted (WL) மற்றும் RAC டிக்கெட்டுகளைப் பொறுத்தவரை, ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு வரை ரத்து செய்யலாம். இதற்காக ஒரு நபருக்கு ₹60 (Clerkage Charge) மற்றும் GST வசூலிக்கப்படும். ஒருவேளை Chart தயாரித்த பிறகும் உங்கள் டிக்கெட் முழுமையாக Waitlist-லேயே இருந்தால், அது தானாகவே ரத்து செய்யப்பட்டு பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்துவிடும்.

Tatkal Ticket Cancellation Rules

Confirmed Tatkal Ticket-களை ரத்து செய்தால் எந்தப் பணமும் திரும்பக் கிடைக்காது (Zero Refund). ஆனால், ரயில் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்தாலோ அல்லது ரயில் ரத்து செய்யப்பட்டாலோ, நீங்கள் TDR (Ticket Deposit Receipt) தாக்கல் செய்து முழுப் பணத்தையும் பெறலாம்.

5. Boarding Point மாற்றத்தில் புதிய வசதி

பயணிகளுக்கு ஒரு நற்செய்தியாக, இப்போது ரயில் புறப்படுவதற்கு 30 Minutes முன்பாகக் கூட உங்கள் Boarding Point-ஐ மாற்றிக்கொள்ளலாம். இது பெரிய நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

6. ஆதார் அங்கீகாரம் கட்டாயம் (Aadhaar Authentication )

2025 அக்டோபர் முதல், IRCTC இணையதளம் அல்லது ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது முதல் 15 நிமிடங்களில் Aadhaar Authentication செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது போலி ஏஜென்ட்டுகளைத் தவிர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

முக்கிய குறிப்புகள் :

  1. பயணத் திட்டம் மாறினால், 72 மணி நேரத்திற்கு முன்பே ரத்து செய்து நஷ்டத்தைத் தவிர்க்கவும்.
  2. 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் ஒரு ரூபாய் கூட கிடைக்காது என்பதை நினைவில் கொள்க.
  3. Automatic Refund வசதி இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது, எனவே TDR தாக்கல் செய்யும் அவசியம் பல இடங்களில குறைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வசதிகள்

  • PNR Status Check: “உங்கள் டிக்கெட்டின் தற்போதைய நிலையை அறிய NTES PNR Enquiry பக்கத்தைப் பயன்படுத்தவும்.”
  • Train Schedule: “ரயில் நேரங்கள் மற்றும் வழித்தடங்களை நேரலையில் காண National Train Enquiry System அல்லது அதிகாரப்பூர்வ ஆப்-களைப் பயன்படுத்தலாம்.”

Spread the News